Connect with us

Gossips

அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்.! காத்திருக்கும் தரமான சர்ப்ரைஸ் …

நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது தனது வரவிருக்கும் படமான புஷ்பா 2 படப்பிடிப்பில் இருக்கிறார். சுகுமார் இயக்கி வரும் இதன் இரண்டாம் பாகம் இந்த வருட இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Pushpa The Rise 2 [Image Source: Twitter]

தற்போது, புஷ்பா 2 படத்தின் முதல் காட்சி ஏப்ரல் 8-ம் தேதி வெளியாகும் என்ற ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஏப்ரல் 8-ம் தேதி என்பதால், அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தீவிர ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

Pushpa The Rise 2 [Image Source: Twitter]

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தயாரிப்பாளர்களே வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பை சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கிய அல்லு அர்ஜுன், தற்போதைய செட்யூலை முடித்ததை தொடர்ந்து, அவர் தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக ராஜஸ்தானுக்கு சென்றுள்ளாராம்.

இதையும் படிங்களேன் – ஐயோ…சமந்தாவுக்கு என்னாச்சு.! பயங்கர ரத்த காயத்துடன் வெளியான புகைப்படம்…

Pushpa The Rise 2 [Image Source: Twitter]

இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கிய, புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த அதிரடி திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை சாதனை படைத்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முத்தம்செட்டி மீடியா மூலம் தயாரிக்கப்பட்டு வரும் இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது என்றே சொல்லலாம்.

Samantha In Pushpa

Samantha In Pushpa [Image Source: Google ]

Continue Reading
To Top