Connect with us

News

மாஸ் காட்டும் எஸ்கே.! ரிலீஸுக்கு முன்பே ரூ.83 கோடி லாபம் பார்த்த மாவீரன்…

பிரின்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து வருகிறார்.

Sivakarthikeyan Maaveeran

Sivakarthikeyan Maaveeran [Image Source: Google]

வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தை அருண் விஸ்வா என்பவர் நல்ல பட்ஜெட்டில் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துள்ள நிலையில், விரைவில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடியவுள்ளது. மேலும், சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கான முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Sivakarthikeyan in Maaveeran Scene Ah Scene Ah Lyrical video

Sivakarthikeyan in Maaveeran Scene Ah Scene Ah Lyrical video [Image Source: Twitter]

தற்போது, படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல டிவி சேனலான சன் டிவி வாங்கியுள்ளது என படக்குழு அதைகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிவா கார்த்திகேயனின் மாவீரன் படம் திரையரங்கில் வெளிவதற்கு முன், ரூ.83 கோடி சம்பாதித்துள்ளதாகவும், இது அவரது முந்தய படங்களை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதில், பரத் சங்கர் இசையமைத்து வரும் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் சரிகம நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. ‘மாவீரன்’ OTT உரிமை சுமார் 33 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும், அதனை பிரபல OTT நிறுவனமான, அமேசான் ப்ரைம் வீடியோ வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்களேன் – ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்…

இதற்கிடையில், மாவீரன் படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, மாவீரன் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி வெளியிடவுள்ளதாகவும், படத்தை வரும் ஜூன் 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Maaveeran release

Maaveeran release [Image Source: Twitter]

Continue Reading
To Top