News
ஜெயிலரை கண்டு ஒதுங்கிய மாவீரன்.! ரிலீஸ் தேதியை மாற்றி குறித்து படக்குழு…
நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் “மாவீரன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் நடித்து உள்ளார்.
இந்த திரைபடத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தில் இருந்து சமீபத்தில் கூட ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
தற்போது, படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அட ஆமாங்க… இப்படம் முதலில் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 என்று அறிவித்ததால், இப்பொது மாவீரன் படக்குழு தேதியை மாற்றியுள்ளார். அதன்படி, மாவீரன் திரைப்படம் ஜூலை 14ம் தேதியே வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Our #Maaveeran/#Mahaveerudu, will see you in theaters worldwide – much SOONER & BIGGER, on JULY 14th ????@Siva_Kartikeyan ????#MaaveeranOnJuly14th#MahaveeruduOnJuly14th #VeerameJeyam ????????@madonneashwin @AditiShankarofl @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/QOylpnkFZy
— Shanthi Talkies (@ShanthiTalkies) May 5, 2023
இந்த திரைப்படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 21-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
