Gossips
‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த மைக்கேல் ஹீரோ.!
தனுஷின் கேரியரில் மிகப்பெரிய படமாக உருவாகி ‘கேப்டன் மில்லர்’ உருவாகி வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அருண் மாதேஷ்வரன் எழுதி இயக்கிகும் இந்த திரைப்படத்தில், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சமிபத்தில் தான் தனுஷுடன் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் சிவ ராஜ்குமார் இணைந்தார். இதன் படப்பிடிப்பு குற்றாலத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் குறித்த சமீபத்திய விஷயம் என்னவென்றால், சந்தீப் கிஷன் படக்குழுவுடன் இணைத்துள்ளார். மேலும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்களேன் – கிராமத்தானாக மிரட்டும் நானியின் தசரா’ ட்ரைலர்.!
தற்போது, நடந்து வரும் ஷெட்யூலில் சண்டை காட்சிகளை படமாக்கி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கேப்டன் மில்லர் இந்த ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.
