News
மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்தின் மோஷன் போஸ்டர்.!
ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளரான சஷிகாந்த் டெஸ்ட் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக முன்பு தகவல் வெளியானது. அந்த வகையில், இன்று அவரது தயாரிப்பிலும் இயக்கத்திலும் நடிகர்கள் ஆர்.மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது, ஒய்நாட் ஸ்டுடியோஸ் இதனை வெளியிட்டுள்ளது. விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. மேலும், இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சக்ரவர்த்தி ராமச்சந்திராவுடன் இணைந்து சஷிகாந்த் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.
