Connect with us
ar rahman and msv

Videos

ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாட பயந்த எம்எஸ்வி…இவ்வளவு பெரிய ஜாம்பவானுக்கே அவ்வளவு பயமா..

ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாட பயந்த எம்எஸ்வி…இவ்வளவு பெரிய ஜாம்பவானுக்கே அவ்வளவு பயமா..

காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் மறைந்த முன்னணி இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்த பாடல்கள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 70, 80 அந்த சமய  காலகட்டத்தில் அவர் இசையமைக்கும்  படங்களின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி அடைந்தது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவருடைய பாடல்கள் மக்களின் மனதை விட்டு போகாது.

m. s. v

m. s. v [Image Source : File Image ]

இந்நிலையில், பல பெரிய படங்களுக்கு இசையமைத்த ஜாம்பவான் எம்எஸ்வி விஸ்வநாதன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு படத்தில் பாட பயந்த கதை பற்றி உங்களுக்கு தெரியுமா..? அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவம்  குறித்த தகவலை தான் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட எம்.எஸ்.வி. விஸ்வநாதன் மகன் பிரகாஷ்  தெரிவித்துள்ளார்.

m. s. viswanathan

m. s. viswanathan [Image Source : File Image ]

இது தொடர்பாக பேசிய எம்.எஸ்.வி. விஸ்வநாதன் மகன் பிரகாஷ்  ” ஒரு நாள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அப்பாவை பாட வைப்பதற்காக ஸ்டுடியோவிற்கு வர சொன்னார். அப்போது என்னுடைய தந்தை  அந்த ரெக்கார்டிங் வேண்டாம் என்று சொல்வதற்காக தான் அவருடைய ஸ்டூயோவிற்கு சென்றார்.  ஏனென்றால் அந்த அளவிற்கு அப்பாவுக்கு பயம் இருந்தது.

m. s. viswanathan son prakash

m. s. viswanathan son prakash [Image Source : File Image ]

அதுக்கு காரணம் என்னவென்றால் அந்த சமயம் வேறு ஒரு சவுண்ட் ட்ரெண்டிங்கில்  இருந்தது. எனவே அந்த சவுண்டுக்கு ஏற்றது போல நம்மளுடைய குரல் எப்படி செட் ஆகும் என பயந்தார். ஸ்டுடியோவிற்குள் நுழைந்து பார்த்தால் மிகவும் கலர்ஃபுல்லாக இருந்தது. ஏனென்றால், அப்பா பாட சென்ற அன்றைய தினம்  ஏ ஆர் ரகுமானின் பிறந்தநாள்.

m. s. viswanathan and ar rahman

m. s. viswanathan and ar rahman [Image Source : File Image ]

எனவே பிறந்தநாள் அதுவுமாய் ஏ ஆர் ரகுமானே ஏமாற்றினால் நன்றாக இருக்காது பாடி விடுவோம் என்று பாடினார். ஏ ஆர் ரகுமான் ரெக்கார்டிங் ஆன் செய்துவிட்டு அப்பாவிடம் உங்களுடைய ஸ்டைலில் நீங்கள் பாடுங்கள் என 4 மணி நேரம் பாட வைத்தார். பிறகு அந்த பாடலை ரஹ்மான் அப்பாவிடம் காட்டவே இல்லை. இதனால்  அப்பா மனதிற்குள்  நான் பாடியது  அவருக்கு பிடிக்கவில்லையோ என யோசித்தார்”  என அவருடைய மகன் பிரகாஷ்பேட்டியில்  தெரிவித்துள்ளார். அவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் மற்றும்  நெட்டிசன்கள் இவ்வளவு பெரிய ஜாம்பவானுக்கே பயமா ..? என கூறி வருகிறார்கள்.

Continue Reading
To Top