என்னுடைய க்ரஷ் அந்த தெலுங்கு நடிகர் தான்.! ரம்யா கிருஷ்ணனின் ஓபன் டாக்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மூலம் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
அதே பாணியில், தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். அட ஆமாங்க… ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினிகாந்துக்கு வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரம்யா கிருஷ்ணன் பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் சில தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில், இப்பொது பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வரும் அவர், பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை என்னுடன் க்ரஷ் என்று மேடையில் ஓப்பனாக பேசி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இதையும் படிங்களேன் – ‘கோப்ரா’ ட்விட்டர் விமர்சனம்: விக்ரமின் அசுரத்தனமான நடிப்பு.! வீக்கான திரைக்கதை.?
அதாவது, ‘பிரம்மாஸ்திரா’ படக்குழு படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். இதில், இயக்குனர் ராஜமவுலி, ரன்பீர் கபூர், நாகார்ஜூனா கலந்து கொண்டனர். மேலும், நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று இருக்கும்போது, இந்த மூன்று பிரபலங்களிடமும் சில கேள்விகள் கேட்கப்பட்டது.
அந்த வகையில், நடிகர் நாகார்ஜூனாவிடம் திரையுலகில் உங்களது க்ரஷ் என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு, நாகர்ஜுனா பதில் அளிக்காமல் நடிகை ரம்யா கிருஷ்ணன் பதில் அளித்தார். அவர் இது குறித்து கூறுகையில், யாரை பார்த்து என்ன கேக்குறீங்க… அவருக்கு க்ரஷ் ஒண்ணா? ரெண்டா? பல உண்டு… அவரது க்ரஷ் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால், “என்னுடைய க்ரஷ் நாகர்ஜுனா தான்” என்று ரம்யா கிருஷ்ணன் ஓப்பனாக பேசியதும் அந்த அரங்கமே அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
