News
ஆதித்த கரிகாலன் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு – சீயான் விக்ரம்
கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியது. சோழ வம்சத்தின் கதையின்படி, சியான் விக்ரம் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், சென்னையில் நேற்று நடைபெற்ற டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய சியான் விக்ரம், ஆதித்த கரிகாலனால் எப்படி நந்தினியை மறக்க முடியாதோ, அதேபோல என்னால் இப்படத்தில் நடித்ததை மறக்க முடியாது.
ஆதித்த கரிகாலன் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு, மணிரத்னம் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்றும் அவர் இயக்கிய சினிமாவில் நானும் இருந்திருக்கிறேன் என பெருமிதம் கொண்டார்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், சியான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.
Related
