News
நடிகைக்கு மது பாட்டிலை பரிசளித்த தந்தை.! கொந்தளித்த தயார்…
தெலுங்கு பிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான அஷூர் ரெட்டியின் பெயர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது, தினம் ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். ஆஷு ரெட்டி ஆடம்பரமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து, அடிக்கடி துபாய், அமெரிக்கா, மாலத்தீவுகள் மற்றும் பிற நாடுகளுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட மருத்துவமனை படுக்கையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்பொது, தனது கையில் மேன்ஷன் ஹவுஸ் மதுபான பாட்டிலை வைத்திருக்கும் படி, புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்டார்.
மேலும் அந்த பதிவில், தனது தந்தை தனக்கு மதுபான பாட்டிலை பரிசாக அனுப்பியதாக தெரிவித்துளளார். ஆனால், இந்த பரிசு அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்றுமகுறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்களேன்- எனக்கு பணம் தான் முக்கியம்…கண் கலங்கி கதறி அழுத நடிகை ஆத்மிகா.!
இந்த ஸ்டோரியை பார்த்த ரசிகர்கள் ஆஷு ரெட்டியின் தந்தை இது போன்ற பரிசுகளை வழங்குவாரா என்று அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கு, நெட்டிசன்களும் பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
