Connect with us

Celebrities

இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் 2015 ஆம் ஆண்டு தனுஷ் தயாரித்து விஜய் சேதுபதி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து டேட்டிங் செய்யத் தொடங்கினர். பின்னர், எட்டு வருட காதல் பயணத்துக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபல விருந்தினர்கள் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

Shah Rukh Khan's sudden visit to Nayanthara

Shah Rukh Khan’s sudden visit to Nayanthara [Image Source: Twitter]

இதனை தொடர்ந்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 9 ஆம் தேதி அபிமான தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் தங்களுக்கு இரட்டை மகன்கள் பிறந்ததாக அறிவித்தனர். மேலும், விக்னேஷ் சிவன் தாது குழந்தைகளின் பெயர்களை உயிர் மற்றும் உலகம் என சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வந்தார்.

Nayanthara – VigneshShivan with babies

இதுநாள் வரை தனது குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்களை மறைமுக வைத்திருந்த நிலையில், தற்போது இரட்டை குழந்தைகளின் முழுப் பெயர்கள் அறிவித்துள்ளனர். ஒருவருக்கு உயிர் ருத்ரோனில் N சிவன்  என்றும் மற்றொருவருக்கு உலக தெய்விக் N சிவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Nayanthara – VigneshShivan with babies [Image Source: Twitter]

இதற்கிடையில், நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திலும், ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் தனது 75வது படத்திலும் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். மறுபக்கம், விக்னேஷ் சிவன் இயக்கும் தனது ஆறாவது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
To Top