News
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நோ…அண்ணாச்சி படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.?
சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் “தி லெஜெண்ட்”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட்டானது என்றே கூறலாம்.

Legend Saravanan [Image Source: Google]
இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த அறிவியல் ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்தை ஜேடி அண்ட் ஜெர்ரி இயக்கத்தில், சரவணன் அருள், ஊர்வசி ரவுத்தேலா, சுமன், கீதிகா, பிரபு, விவேக், யோகி பாபு, நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

Legend Saravanan [Image Source: Google]
இந்நிலையில், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க முதலில் நயன்தாராவை அணுகியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆனால் நயன்தாரா இதில் நடிக்க மறுத்துவிட்டாராம். நல்லவேளை இதில் நயன் நடிக்கவில்லை என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்களேன்- கனவு நனவான தருணம்..சொந்தமாக கார் வாங்கிய “Dj Black”.! வைரலாகும் வீடியோ.!

Nayanthara [Image Source: Twitter]
மேலும் இதைப்போல இதற்கு முன்பே கடந்த ஆண்டும் “தி லெஜெண்ட்” படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதற்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் தான் அந்த படத்தில் நடிக்கமாட்டேன் என்று நயன்தாரா மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
