Connect with us
rajini and sk

News

அடுத்த ரஜினி சிவகார்த்திகேயன் தான்.! அந்தர் பல்டி அடித்து அதிர வைத்த மிஷ்கின்.!!

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் படத்தில் சரிதா, மிஸ்கின், யோகிபாபு, உள்ள பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  இந்த திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

MaaveeranPreReleaseEvent

MaaveeranPreReleaseEvent [Image Source : Twitter /@@dp_karthik]

இதனை முன்னிட்டு படத்திற்கான ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.  ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் மிஷ்கின், சரிதா, மடோனா அஸ்வின்  என பலரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய மிஸ்கின் சிவகார்த்திகேயன் ரஜினி தான் என கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

Mysskin and sk

Mysskin and sk [Image Source : Twitter /@SKFazil_]

மேடையில் பேசிய மிஷ்கின் ” நான் முதலில் சிவகார்த்திகேயனை பார்த்த போது அவர் நல்ல மிமிக்கிரி செய்வேன்  என்று என்னிடம் கூறினார். அந்த சமயம் நான் அவரிடம் நீ இன்னும் சாதிக்க வேண்டும் என்று கூறினேன். நான் கூறியதை போலவே, அவர் சாதித்து விட்டார். நடிகை சரிதா சிவகார்த்திகேயனை ரஜினி என்று கூறினார். இப்போது நானும் அதையே சொல்கிறேன் சிவகார்த்திகேயன் ரஜினி தான் என கூறியுள்ளார்.

Mysskin from Maaveeran

Mysskin from Maaveeran [Image Source : Twitter /@filmsandstuffs]

இதையும் படியுங்களேன்- பிரபல நடிகையை கடத்திய ராமராஜன்..? பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்.!!

இவர் பேசியதை பார்த்த ரஜினி ரசிகர்கள் சிவகார்த்திகேயன் நல்ல நடிகர் தான் ரஜினியுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் எனவும்,  சில நெட்டிசன்கள் முன்னதாக ஒரு பேட்டியில் மிஷ்கின் சிவகார்த்திகேயன் யார் என்று தெரியவில்லை  என்று கூறினார். இப்போது எப்படி சொல்கிறார்..?  என கேள்வி எழுப்பு வருகின்றனர்.

Continue Reading
To Top