Connect with us

News

ஹெலோ தயாரிப்பாளரே..! உங்களுக்கு முதலில் நினைவிருக்கா? கதறும் சிம்பு ரசிகர்கள்..

சொன்ன நேரத்திற்கு ‘பத்து தல’ படத்தின் செகண்ட் சிங்கிளை வெளியிடாததால் ரசிகர்கள் இணையத்தில் கதறல்.

ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் முக்கிய ரோலில் நடித்துள்ள ‘பத்து தல’ படத்திற்கான முதல் பாடல் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Pathu Thala - Namma Satham Glimpse

Pathu Thala – Namma Satham Glimpse [Image Source: Twitter]

தற்போது பத்து தல படத்தின் செகண்ட் சிங்கிளான ‘நினைவிருக்கா’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது. ஆனால், 6 மணியை தாண்டியும் பாடல் வெளியாகவில்லை.  செகண்ட் சிங்கிள் ப்ரோமோவை நேற்று படக்குழு வெளியிட்ட நிலையில், இந்த பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

இதையும் படிங்களேன்  – விரைவில் அடுத்த சம்பவம்.! இணையத்தில் வைரலாகும் லெஜெண்ட் சரவணனின் நியூ லுக்.!.

இந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாடலுக்கு ‘நினைவிருக்கா’ என்று தலைப்பிட்டு இறுக்கும் வேலையில், அறிவித்தபடி பாடலை 6 மணிக்கு வெளியிடாததால் சிம்பு ரசிகர்கள் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை பார்த்து, ‘உனக்கு முதல்ல நினைவிருக்கா டா’, படம் இன்னும் 15 நாள்ல ரிலீஸ்… சொன்ன டைம்-க்கு படத்தையாச்சு ரிலீஸ் பண்ணுங்க அண்ணா என்று கதறி தங்கள் கேள்வியை முன் வைத்து வருகிறார்கள்.

Continue Reading
To Top