News
செம….! அவதார்-2 திரைப்படத்தை இனி இலவசமாக பார்க்கலாம்.!
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ ஜூன் 7 ஆம் தேதி முதல் OTT- ல் இலவசமாக பார்க்கலாம்.
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அவதார் 2 திரைப்படம் இந்தியாவில் ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் வெளியானது.
தற்போது, பல OTT தளங்களில் அவதார்-2 திரைப்படத்தை கட்டணம் செலுத்தி தான் பார்க்க முடிந்தது. இனி அவதார்-2 ஜூன் 7 முதல் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இதுவரை, இந்த படத்தை பயனர்கள் இலவசமாகப் பார்க்கலாம்.
எனினும், எத்தனை மொழிகளில் வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம், மாயாஜாலம் நிறைந்த பிரம்மாண்ட காட்சிகளாக நிறைந்துள்ளது.
‘அவதார் 2’ படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், சிசிஎச் பவுண்டர், எடி ஃபால்கோ, ஜெமைன் கிளெமென்ட் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.
