News
அடக்கடவுளே.! நடிகை சாவித்திரி அனுபவித்த கொடுமைகள்? இவருடைய வாழ்வில் இவ்வளவு சோகமா…
தமிழ் சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை அருமையாக நடித்து கலக்கக்கூடிய ஒரு பழம்பெரும் நடிகை சாவித்திரி. இவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட இவர் நடித்த படங்கள் அனைத்தும் நம்மளால மறக்க முடியாதவையாக இருக்கிறது. இந்நிலையில், சாவித்திரி இறப்பதற்கு முன்பு எவ்வளவு கஷ்டங்களை சந்தித்தார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

Savitri [Image Source : File Image ]
அதன்படி, சாவித்திரி முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த காலத்திலே 1971 ஆம் ஆண்டு வெளிவந்த பிராப்தம் படத்தை அவரே இயக்கி நடித்து தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் அருமையாக இருந்தாலும் கூட அந்த சமயம் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை எடுப்பதற்கு முன்பே ஜெமினி கணேசன் சாவித்திரியிடம் எவ்வலாவோ கூறியுள்ளாராம். அதாவது இந்த படத்தை நீ இயக்கு ஆனால் தயாரிக்கவேண்டாம் என்று. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Savitri AND Gemini Ganesan [Image Source : File Image ]
ஆனால், நடிகை சாவித்திரி அதையெல்லாம் பற்றி கவலையே படவில்லையாம். படத்தை தயாரித்தால் நன்றாக லாபம் வரும் என எண்ணி அவர் பிராப்தம் படத்தை இயக்கி தயாரித்தாராம். ஆனால், எதிர்பார்த்த வசூலை படம் ஈட்டவில்லை என்ற காரணத்தால் பொருளாதார ரீதியாக பணத்தை இழந்தாராம். இதிலே நடிகை சாவித்திரி மிகவும் சோகமாகிவிட்டாராம். அதன்பிறகு 2 ஆண்டுகளாக தமிழில் சாவித்திரிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வரவில்லை என்ற காரணத்தால் தெலுங்கு சினிமாவிற்கு சென்றுள்ளார். பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்துதான் தமிழ் சினிமாவிற்குள் வந்துள்ளார்.

Savitri [Image Source : wikipedia ]
இருப்பினும், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வீழ்ச்சியை பிராப்தம் படம் மூலம் சந்தித்ததால் அதனை ஈடுகட்டவே முடியவில்லையாம். பிறகு கடந்த 1981-ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக ஜெமினி கணேசன் – சாவித்திரி இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியால் மனம் வாடிப்போன சாவித்திரிக்கு தனது கணவர் விட்டு சென்றதும் மிகப்பெரிய மனவருத்தத்தை கொடுத்துள்ளதாம். பிறகு தலைமையிலே இருந்த காரணத்தால் சாவித்திரிக்கு குடிப்பழக்கமும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ACTRESS Savitri [Image Source : File Image ]
சினிமா துறையில் நடித்துகொண்டிருந்த காலகட்டத்திலே அவருக்கு குடிப்பழக்கம் இருந்தாலும், தனது கணவர் பிரிந்த பிறகு தனிமையில் இருந்த காரணத்தால் இன்னுமே குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டாராம். பிறகு சினிமாவை விட்டு விலகிவிட்டாராம். இது தான் அவருடைய வீழ்ச்சிக்கு காரணம் எனவும் பிரபல பத்திரிக்கையாளர் சுரா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
