News
ஐயோ ஆள விடுமா! அலறி ஓடிய அம்பிகாவின் கணவர்…காரணம் என்ன தெரியுமா.?
1978 முதல் 1989 வரை தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கலக்கி வந்தவர் நடிகை அம்பிகா. இவர் ரஜினி, கமல்ஹாசன், சத்தியராஜ் உள்ளிட்ட டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் அம்பிகா குறித்த அதிர்ச்சியான தகவல் ஒன்றை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Ambika [Image Source : File Image ]
இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” நடிகை அம்பிகா இரண்டு திருமணம் செய்துகொண்டவர். ஆரம்பத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் சீனு ஜான் என்ற கேரளவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு அவருடன் விவாகரத்து நடந்தது. அதற்கு பிறகு ஒரு நடிகருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையிலும் அம்பிகா இருந்தார்.

Ambika [Image Source : File Image ]
அந்த நடிகரின் பெயர் ரவிகாந்த். அவர் பார்ப்பதற்கு அப்படியே நடிகர் கமல்ஹாசனை போலவே இருப்பார். கமல்ஹாசனுடைய குரலும் அவருக்கு அப்டியே இருக்கும். அவரும் நடிகர் ரவிகாந்த்தும் ஒரு 4 ஆண்டுகளாக லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இருந்தார்கள். பிறகு ரவிகாந்த்துடன் அம்பிகா சண்டைபோட்டுக்கொண்டார். இருவருக்கு இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டது.

Ambika [Image Source : File Image ]
பிரச்சனை பெரிசாக மாறியவுடன் ஐயோ ஆள விடுமா என ரவிகாந்த் அம்பிகாவை விட்டு அலறி ஓடிவிட்டார். இப்போது அவர் தனியாக நீலாங்கரையில் வீடு கட்டி வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அம்பிகாவும் இப்போது சோலா படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்” எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அம்பிகாவுக்கு இரண்டு திருமணம் முடிந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியது தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
