Connect with us
s shankar sad

News

ஐயோ கடவுளே முடியல… இந்தியன் 2 படத்தால் நொந்துபோன இயக்குனர் ஷங்கர்…

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் காண படப்பிடிப்பு தற்போது சென்னை விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்தியன் 2 திரைப்படத்திற்கான  படப்பிடிப்பு  சமீபத்தில் தான் சூரத்தில் நடந்த முடிந்தது. அந்த சமயம் சூரத்தில்  வெயில் மிகவும் கொடுமையாக  வீசியதால் ஷங்கர் வெயிலில் 100% சோர்வடைந்து விட்டாராம்.

s shankar

s shankar [Image Source : File Image ]

ஏனென்றால், படத்தின் படப்பிடிப்பு சாலை பகுதிகளில்  நடத்த திட்டமிட்டிருந்த காரணத்தால் கிட்டத்தட்ட 20 நாட்கள் வெயிலில் நின்று கொண்டே படத்தின் படப்பிடிப்பை நடத்தினாராம்.  சூரத்தில் 40 டிகிரி அளவில் வெப்பம் வீசியதால்  வெயிலின் தாக்கத்தை அவரால் தாங்கவே முடியவில்ல.  அதனால் ஷங்கர் கிட்டத்தட்ட சுருண்டே போய்விட்டாராம்.

Shankar

Shankar [Image Source : File Image ]

ஆனாலும், சிறுது கூட நேரம் கடத்தாமல் அந்த கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு விறு விறுவென அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினரை அழைத்து வந்துவிட்டாராம். என்னதான் 50  கோடி சம்பளம் வாங்கினாலும் இயக்குனர் ஷங்கரும் வெயிலில் படாதபாடு தான் படுகிறார் என்று  சினிமா விமர்சகர் பலரும் கூறி வருகிறார்கள். மேலும், இதனையடுத்து, தற்போது படத்தின் படப்பிடிப்பு தலைகோணத்தில் மீதம் உள்ளதால்  ஒரு 15 நாள் படப்பிடிப்பு மீதமுள்ளதாக கூறப்படுகிறது.

indian 2 and s shankar

indian 2 and s shankar [Image Source : File Image ]

இன்னும் சில நாட்களில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும்.  அவரை தவிர சித்தார்த்காக இந்தியன் 2 திரைப்படத்தில் பாடல் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளதாம். அந்த பாடல் காட்சிகளை மட்டும் சித்தார்த்தை வைத்து எடுத்துவிட்டால் படம் முழுவதுமாக முடிந்துவிடுமாம். பிறகு இறுதிக்கட்ட பணிகள், அடுத்தாக வாரிசாக அப்டேட் தான் வரும் எனவும் கூறப்படுகிறது.

indian 2 movie

indian 2 movie [Image Source : File Image ]

இதையும் படியுங்களேன்- அது ரெம்ப பிடிச்சிருந்தது… 8 ஆயிரம் கொடுத்து வாங்கிட்டேன்.. ‘பாத்ரூம்’ சீக்ரெட் கூறிய தமன்னா.!

மேலும், இந்தியா 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர்,  சித்தார்த்,  பாபி சிம்கா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல  பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.  படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.  படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top