Connect with us

Videos

ஐயோ ரொம்ப அழகு…தளபதியை ரசிக்கும் ராஷ்மிகா.! வைரலாகும் வீடியோ…

ஐயோ ரொம்ப அழகு…தளபதியை ரசிக்கும் ராஷ்மிகா.! வைரலாகும் வீடியோ…

நடிகை ராஷ்மிகா விஜயின் தீவிர ரசிகை என்பது அவரே பல பேட்டிகளில் கூறியது உண்டு.  அவருடைய ஆசை விஜய்யுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்பது தான். அந்த ஆசையும் தற்போது வாரிசு படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது.  ஆம், விஜய் நடித்துள்ள வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா தான் நடித்திருக்கிறார்.

Varisu Movie

Varisu Movie [Image Source: Google]

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுக்கு ஆவலுடன் காத்துள்ளனர். ஏற்கனவே படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் டிரைலரும் வெளியாகவுள்ளது.

Rashmika Mandanna and Vijay

Rashmika Mandanna and Vijay [Image Source: Google]

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா காரில் படுத்துக்கொண்டு வாரிசு படத்திலிருந்து வெளியான தீ தளபதி பாடலை பார்த்து தளபதியை ரசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” ஜாலியாக அந்த பாடலை கேட்டுவிட்டு தளபதியை பார்த்து ரசித்துவிட்டு ராஷ்மிகா திருஷ்டி சுத்தி போடுகிறார்.

இதையும் படியுங்களேன்- இந்திய அளவில் டாப் 10 லிஸ்ட்… பிரமாண்ட சாதனையில் இடம் பிடித்த 2 தமிழ்ப்படங்கள்.?

Rashmika

Rashmika Mandanna [Image Source: Twitter]

இந்த வீடியோவை பார்த்த தளபதி ரசிகர்கள் பலரும் நம்மளை விட வெறித்தமான ரசிகையாக இருப்பார் போல என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகை ராஷ்மிகா வாரிசு படத்தை தொடர்ந்து புஷ்பா 2-வில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top