News
இன்று இரவு 8:01-க்கு வெளியாகிறது “ஒசரட்டும் பத்து தல” பாடல்.!
பத்து தல திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மேலும், இந்த திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி தமிழ். தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமபத்தில், பத்து தல படத்தில் இடம்பெற்றிருந்த ‘ராவாடி’ என்ற பாடலுக்கு நடிகர் ஆர்யாவின் மனைவி சயீஷா நடனமாடியுள்ளார். இந்த பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இதையும் படிங்களேன் – படத்தில் கத்தி…நிஜத்தில் பக்தி… மறைந்த தாயின் ஆசைக்காக கோவில் கட்டிய பிரபல வில்லன் நடிகர்.!
மேலும், இந்த பாடலில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக சயீஷா நடனமாடி இருந்தார் என்றே கூறலாம். இந்த நிலையில், பத்து தல படத்தின் இடம்பெறுள்ள மற்றோரு பாடலான “ஒசரட்டும் பத்து தல” பாடல் இன்று இரவு 8:01க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
