Connect with us
Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Videos

ஆஸ்கர் 2023: வீடு திரும்பிய ராம் சரணுக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு.!

இந்த ஆண்டுக்கண ஆஸ்கர் விருதுகளில் RRR திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக ஆஸ்கார் விருதினை வென்றது. தற்போது, ஆஸ்கர் விருது விழாவை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய ராம் சரணை டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வரவேற்றனர்.

Ram Charan at Delhi International Airport [Image Source: Twitter]

இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இன்று ராம் சரண் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்கு முன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது, ஏராளமான ரசிகர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டு ஆர்ஆர்ஆர் கொடிகள் மற்றும் மலர்களை ஏந்தியவாறு பலத்த ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். மேலும், அவருடன் மனைவியும் உடன் இருந்தார் .

இதற்கு முன்னர், ஜூனியர் என்டிஆர் கடந்த மார்ச் 15 அன்று அமெரிக்காவிலிருந்து வீடு திரும்பினார். ஜூனியர் என்டிஆர் வந்ததை அறிந்து, ஐதராபாத் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வருகை தனது அமோக வரவேற்பு அளித்தனர். மேலும், விமான நிலையத்தில் அவரை வரவேற்க அவரது மனைவி லட்சுமி பிரணதி வந்தார்.

இதையும் படிங்களேன்  – இடுப்பழகி சிம்ரனின் 50வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜூனியர் என்டிஆர், 2023 ஆஸ்கார் விருதுகளில் இருந்து தனது சிறந்த தருணம் எதுவென்றால், “கீரவாணி மற்றும் சந்திரபோஸ் மேடையில் விருதைப் பெற்ற தருணம்  தான் எனது சிறந்த தருணம்” என்று கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top