News
எங்க அப்பா 4 பேர வச்சிருந்தாரு…எம்.ஆர்.ராதா பற்றி பேசிய மகன் ராதா ரவி…
மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகனும், நடிகருமான ராதா ரவி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தந்தை குறித்தும், தாயார் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” என்னுடைய தந்தை எம்.ஆர். ராதா 4,5 பேரை வைத்திருந்தார். ஆனால், அவர்களை எல்லாம் திருமணம் செய்து சரியான அட்ரஸ் கொடுத்து தான் வைத்திருந்தார்.

Radha Ravi about dad mr radha [Image Source : File Image ]
அவர்கள் எல்லாத்துக்கும் வசதி வாய்ப்புகள் பண்ணி கொடுத்தார். எல்லா குழந்தைகளும் ஒன்றாக தான் படித்தோம்.ராதிகா உட்பட நாங்கள் அனைவருமே ஒன்றாக தான் படித்தோம். ராதிகா எல்லாம் கடைசி காலகட்டத்தில் தான் வந்தார். அதாவது, அவளுடைய அம்மா… ஆனாலும் அவர்கள் எல்லாத்தையும் நாங்கள் எங்களுடைய குடும்பத்தினர் என்று தான் நினைத்து பழகினோம்.

Radha Ravi [Image Source : File Image ]
நாங்கள் அனைவருமே ஒரே குடும்பமாக தான் இருந்தோம். எப்படி அனைவரையும் ஒற்றுமையாக வைத்துக் கொண்டார் என்பது ஒரு ஆச்சரியம் தான். எங்கள் வீட்டிற்குள் குடுமியை பிடித்து கொண்டு போடும் அளவிற்கு சண்டையெல்லாம் நடக்கவே இல்லை. ஒரே ஒரு முறை மட்டும் சண்டைவருவது போல இருந்தது. அந்த சமயம் என்னுடைய அம்மா தனலட்சுமியம்மாள் ராதா உயிரோடு இருந்தார்.

mr radha and radha ravi [Image Source : File Image ]
அந்த சமயம் ஒரு முறை சண்டை வருவது போல இருந்தது. உடனடியாக என்னுடைய அம்மா சண்டைவேண்டாம் கையெழுத்து போட்டு அவுங்க கிட்ட கொடு.. என கூறினார். நானும் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டேன் அவ்வளவுதான். அதோட முடிந்தது எங்களுடைய வீட்டில் என்னுடைய அம்மா சொல்வதை தாண்டி வேற எதுவுமே நடக்காது.

mr radha [Image Source : File Image ]
என்னுடைய தந்தை எம்.ஆர்.ராதாவிடம் உதவி என்று யாரும் கேட்டு வந்தால் உதவி செய்யாமல் திருப்பி அனுப்பவே மாட்டார். யாராவது அவரிடம் உதவி கேட்டு இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள் என்று என்னிடம் சொல்ல சொல்லுங்க பாப்போம். அந்த அளவிற்கு என்னுடைய தந்தை மிகவும் நல்ல மனிதர் ” என தனது தந்தை பற்றியும் தனது தாயார் பற்றியும் ராதாரவி மிகவும் எமோஷனலாக பேசி உள்ளார்.
