Connect with us
shruti haasan about kamalhaasan

Celebrities

எங்க அப்பா இணையற்ற பேரரசர்! கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்!

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு ஒரு இலக்கணமாக திகழும் நடிகர் கமல்ஹாசன் இன்றுடன் தனது 64-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதுவரை அவர் நடித்த படங்களும் சரி அவர் இயக்கிய படங்களும் சரி என்றுமே காலத்தால் அழிக்கமுடியாத ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில், 64 ஆண்டுகள் நிறைவடைந்ததைஎடுத்து பிரபலங்கள் மாற்றும் ரசிகர்கள் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், கமல்ஹாசன் மகனும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஏற்ற இறக்கங்கள், சவால்கள், அனைத்தையும் அவர் சந்தித்தார்; ஆனால் எதுவும் உலக நாயகனையும், திரைத்துறையை உயர்த்த அவர் எடுக்கும் முயற்சியையும் நிறுத்தவில்லை. திரையுலகை 60 ஆண்டுகளாக ஆளும் இணையற்ற பேரரசர், இன்று 64ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

அதைப்போல நடிகர் விஜய்சேதுபதியும் தனது சமூக வலைதள பக்கங்களில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” கமல்ஹாசன் 64 ஆண்டுகள் அடி எடுத்து வைத்ததை ஒரு போஸ்டர் ஒன்றை வெளியீட்டு கமல் சாரின்  64 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

இதுவரை எத்தனையோ நடிகர்கள் சினிமாவில் நடிக்க வந்தாலும் அல்லது நடித்துக்கொண்டிருந்தாலும் கமல்ஹாசன் எப்போதுமே உச்சத்தில் இருப்பார் என்பதை எந்த சந்தேகமும் இல்லை. இவர் நடித்த சத்யா, தேவர் மகன் போன்ற படங்களில் இவர் நடித்த கதாபாத்திரம் இன்று வரை பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.மேலும், கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top