Connect with us

News

ரஜினிக்கு வில்லியாக படையப்பா நடிகை.! வெளியான சூப்பர் அப்டேட்..

ரஜினிக்கு வில்லியாக படையப்பா நடிகை.! வெளியான சூப்பர் அப்டேட்..

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது அடுத்த படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். இந்த படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியிடவில்லை.

Jailer - Rajinikanth

கடந்த திங்கள் முதல், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் ஸ்டேஷன் செட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தின் நடிகை மற்றும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குவினர் வெளியிட்டனர்.

 

ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இவர்கள் நடிக இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்த இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்களேன் – கோப்ரா ப்ரோமோஷனில் ஒலித்த “பத்தல பத்தல” சாங்.! சும்மா அலற விட்ட மதுரை ரசிகர்கள்..

ரஜினி மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் இதற்கு முன்னர், படையப்பா படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்படத்தக்கது. படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். அதேபோல், 20 வரும் கழித்து மீண்டும் ஜெயிலர் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பொது, ரஜினிகாந்த், விநாயகன் மற்றும் யோகி பாபு சம்பந்தப்பட்ட பகுதிகள் முதலில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Continue Reading
To Top