News
வாலி பாடலையே ரிஜெக்ட் செய்த பத்து தல இயக்குனர்.! தனது பாணியில் தக்க பதிலடி சுவாரசிய கதை…
காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் மறைந்த பாடலாசிரியர் வாலி, பல ஹிட் பாடல்களை கொடுத்து அவர் மறைந்து இன்றும் கூட ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அப்படி இருக்கையில், பிரபல இயக்குனர் ஒருவர் அவரை எதித்து பேசியுள்ளார்.
அவர் வேறுயாருமல்ல…நம்ம பத்து தல திரைப்பட இயக்குனர் ஓபிலி என். கிருஷ்ணா தான். அதாவது, இயக்குனர் தனது முதல் படமான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படம் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசினார். அதில், படம் எப்படி உருவானது என்றும், படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, படத்துக்கு வாலி செய்த வேலை குறித்து பகிர்ந்து கொண்டார். முன்பே வா பாடலுக்காக வாரிசாரியிடம் முதல் முறையாக சந்தித்தபோது சண்டையில் தான் முடிந்தது. அப்போது, நானும் ஏ.ஆர் ரகுமான் சாரும் சென்றிருந்தோம், வாலி சார் ‘முன்பே வா’ பாடலுக்கு முதலில் அவரது ரசனையில் ஒரு பாடல் வரிகளை எழுதி வைத்திருந்தார். நான் பார்த்துவிட்டு சார் நல்லா இருக்கு சார் ஆனா இன்னும் கொஞ்சம் பெட்ரா வேணும் அப்படின்னு சொன்னேன்.
உடனே, அவர் நான் எத்தனை காதல் பாடல் எழுதி இருக்கேன் தெரியுமா? அப்படின்னு சொன்னாரு. நான் தன்னை அறியாமல் ஆம சார்… நீங்க நிறைய காதல் படம் எழுதி இருப்பீங்க… இது வந்து என்னோட காதல் பாடல் அத நான்தான முடிவு பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டேன். டக்குனு அவர் கோவத்துல எந்திரிச்சி இதுக்கு தான் புது இயக்குனருக்கு பாடல் பண்ண மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டாரு.
அப்புறம் ஏ.ஆர் ரகுமான் சார் தான் சாமர்த்தியமாக பேசி கூழ் செய்தார். பின்னர் பொறுமையாக வாலி சாரிடம் ஏ.ஆர் ரகுமான் சார் பேசி, இயக்குனர் வேற மாதிரி எதிர்பாக்காப்புல…அப்படினு சொன்னார். அடுத்த நாள் காலை ஒரு 4 மணிக்கு வாலி சார் கால் பண்ணாரு.. என்னையா பண்ணிட்டு இருக்க அப்படின்னு கேட்டாரு… உடனே நான் தூங்கிட்டு இருக்கேன் சார் அப்படின்னு சொன்னேன், என்ன தூங்க விடாம பண்ணிட்டு நீ தூங்கிட்டு இருக்கியா அப்படின்னு கேட்டாரு, இப்ப எழுதி இருக்கேன் இப்போ வந்து ரிஜெக்ட் பண்ணியா பாப்போம் அப்படின்னு சொன்னாரு. அப்படி உருவானது தான் இந்த முன்பே வா பாடல் என்றார்.
