News
பத்து தல: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மகன் பாடிய ‘நினைவிருக்கா’ பாடல்.!
பத்து தல படத்தில் தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மகன் ஏ.ஆர். அமின் பாடியுள்ள ‘நினைவிருக்கா’பாடல் வெளியாகியுள்ளது.
ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் முக்கிய ரோலில் நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படத்தின். படத்திற்கான முதல் பாடல் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது, பத்து தல படத்தின் செகண்ட் சிங்கிளான ‘நினைவிருக்கா’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது. ஆனால், 6 மணியை தாண்டியும் பாடல் வெளியாகவில்லை. செகண்ட் சிங்கிள் ப்ரோமோ நேற்று வெளியான நிலையில், இந்த பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இறுதியாக, மனதை வருடன் அந்த பாடலை சற்று நேரத்திற்கு முன் படக்குழுவினர் வெளியிட்டனர்.
சமீபத்தில், இப்படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. டீசரை வைத்து பார்க்கும்பொழுது இந்த படத்தில, சிம்பு ஒரு அண்டர்கிரவுண்ட் தாதாவாக நடித்திருக்கிறார். இயக்குனர் மற்றும் நடிகரான கெளதம் மேனன் அரசியல் வாதியாக நடித்துள்ளார், கவுதம் கார்த்திக் காவலராக நடித்துள்ளார் என்று சொல்லப்பட்டது, ஆனால், டீசரில் அவர் ஒரு ரவுடியாக நடித்திருப்பது போல் தெரிகிறது.
இதையும் படிங்களேன் – விரைவில் அடுத்த சம்பவம்.! இணையத்தில் வைரலாகும் லெஜெண்ட் சரவணனின் நியூ லுக்.!
மேலும், படத்தில் ப்ரியா பவானி சங்கர், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது.
