News
அம்மா இறந்ததுக்கு அப்பறம் நானு வாழக்கூடாதுனு… தவறான முடிவெடுக்க நினைத்த பவித்ரா.!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயார் தன்னை விட்டு பிறந்துவிட்டதாக எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். அதில் ” ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டுப் போக வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. நீங்கள் எப்போதும் ஒரு சூப்பர்மாம், உண்மையில் சூப்பர் வுமன். ஒற்றை பெற்றோராக இருப்பது எளிதான வேலை இல்லை, ஆனால் நீங்கள் அதை எல்லா வழிகளிலும் ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் ஒரு முறை உங்களுடன் பேசுவதை ஒருமுறை உங்கள் உணவை ஒரு முறை சாப்பிடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.

Pavithra Lakshmi Mom [Image Source : Instagram/@pavithralakshmioffl]
ஆனால் நீங்கள் என்னை வேறு வழியின்றி விட்டுவிட்டீர்கள். தயவு செய்து எப்பொழுதும் என் பக்கத்தில் இருங்கள் என்று நான் இப்போது கேட்கிறேன்” என மிகவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த துயர சம்பவத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டும் வரும் நடிகை பவித்ரா லட்சுமி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அதிர்ச்சியான தகவல் ஒன்றை பற்றி பேசியுள்ளார். இது குறித்து நேர்காணலில் பேசிய அவர் “என்னுடைய அம்மா இறைந்து எனக்கு மிகவும் வேதனை அளித்தது. அந்த துயரத்தில் இருந்து எப்படி நான் மீண்டுவரப்போகிறேன் என பயமாக இருந்தது.

Pavithra Lakshmi [Image Source : Instagram/@pavithralakshmioffl]
அம்மா இருந்த பிறகு நானும் வாழக்கூடாது என்று நினைத்தேன். அம்மாவே இல்லை நாமும் இருக்கக்கூடாது போயிடவேண்டும் என்று யோசித்தேன். ஆனால், அதையும் தாண்டி, நான் எதாவது செய்திருந்தால் என்னுடைய அம்மாவிற்காக நான் செய்த நல்ல விஷயமாக அது இருந்திருக்காது. ஏனென்றால் 27 வருடமாக என்னை வளர்த்தது சுலபமான விஷயம் இல்லை.

Pavithra Lakshmi [Image Source : Instagram/@pavithralakshmioffl]
என்னுடைய அம்மாவிற்கு நான் செய்யக்கூடிய நல்ல விஷயம் என்னவென்றால், அவருக்காக எந்த கஷ்டம் வந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து காமிக்கவேண்டும். இது தான் என்னுடைய அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்தது” என பவித்ரா கண்ணீருடன் பேசியுள்ளார். தவறான முடிவெடுக்க நினைத்த பவித்ராவுக்கு அவருடைய ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
