News
எனக்கு 2 டிக்கெட் போடுங்க..அன்று நடந்த அசம்பாவித சம்பவம்… அதிர்ச்சியில் தமன்னா எடுத்த முடிவு…
நடிகை தமன்னா கடந்த சில நாட்களுக்கு முன்பு விருது விழா ஒன்றிற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் வருவதை பார்த்த ரசிகர்கள் கூட்டமாக கூடி தமன்னாவுடன் செல்ஃபி எடுத்தனர். அப்போது சிலர் தமன்னாவை கையை பிடித்து இழுத்து அத்துமீறி உள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த தமன்னா கத்தினார். மேலும், கூட்டம் அங்கு அதிகமாக இருந்ததால் தமன்னாவிடம் அத்துமீறியது யார் என்று தெளிவாக தெரியவில்லை.

tamanna fans [Image Source : File Image ]
இந்த சம்பவத்தில் இருந்து நடிகை தமன்னா மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறாராம். இதனால் அதிரடியான முடிவு ஒன்றையும் எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், படங்களின் படப்பிடிப்புகளுக்காக வினமானத்தில் செல்லும்போது பிரபலன்களுக்காக சில விமானங்களில் முதல் 2 ரோவில் இருக்கும் இடங்களை ஒதுக்கி வைத்திருப்பார்கள்.

Tamannaah Bhatia [Image Source : File Image ]
இந்நிலையில், விமானத்தில் செல்லும்போது படத்தின் தயாரிப்பு நிறுவனங்களிடம் தமன்னா தனக்கு இரண்டு டிக்கெட்கள் புக் செய்து தரவேண்டும் என்று கூறுகிறாராம். ஒரு டிக்கெட் அவருக்கும் மற்றோரு டிக்கெட் அவருடைய பக்கத்தில் யாரும் அமர கூடாது என்பதற்காக புக் செய்து கொடுக்க சொல்கிறாராம். இது, அந்த விழாவில் நடந்த அசம்பாவித சம்பவத்தில் இருந்து தான் தமன்னா இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

Tamannaah [Image Source : Twitter /@m_gajan]
இதையும் படியுங்களேன்- விஜய் நடித்த எந்த படமும் நான் பாக்கல…பிரபல இயக்குனர் விக்ரமன் ஓபன் டாக்…
பக்கத்தில் வேறு எதாவது ஆள் அமர்ந்து மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட கூடாது என்பதற்காக தமன்னா மிகவும் பயந்து இருக்கிறாராம். மேலும் நடிகை தமன்னா தற்போது தமிழில் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
