நடிகர் சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு ..!
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த திரைப்படத்திற்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்ததுடன், படமும் பல விருதுகளை வாங்கி குவித்தது. இருப்பினும் இந்த படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தி இருப்பதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சூர்யாவும், அதில் அன்புமணி குறிப்பிட்டது போல எந்த ஒரு தனி நபரையோ, சமுதாயத்தையும் பாதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கு இல்லை என தெரிவித்து இருந்தார். ஆனால் பாமகவினர் இத்துடன் விட்டு விடவில்லை.
இதையும் படியுங்களேன் …. உள்ளாடையை காண்பித்து போஸ் கொடுக்கும் ஷாலினி .., வைரல் புகைப்படம் உள்ளே..!
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படம் வரும் மார்ச் மாதம் பத்தாம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை கடலூரில் வெளியிட தடை விதிக்க கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வன்னியர் சமுதாய மக்களிடம் சூர்யா பொது மன்னிப்பு கேட்காத வரை இந்த படத்தை ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என பாமக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது நடிகர் சூர்யா வீட்டின் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
