Connect with us
Mari Selvaraj Controversy

Videos

அதிகாரம் தான்…அடிச்சா திருப்பி அடிக்க முடியாது…ஜாதி பற்றி பேசி சர்ச்சையை கிளப்பிய மாரிசெல்வராஜ்…

இயக்குனர் மாரிசெல்வராஜ் ஏற்கனவே மாமன்னன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசியதற்கு  ஒரு பக்கத்தில் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், அவர் தற்போது ஜாதியை பற்றி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ” நான் என்னுடைய மனைவி கிட்ட அதிகாரத்தை செலுத்தினால் அதுக்கு பெயர் தான் ஜாதி.

என்னுடைய உதவியாளர்களை நான் திட்டுகிறேன், அடிக்கிறேன் என்றால் அவர்களால் என்னை திருப்பி அடிக்கமுடியாது என்று எனக்கு தெரியும். அப்போ எவன் ஒருத்தன் நா வந்து அதிகாரத்தை செலுத்தமுடியும் அவனால் திருப்பி அதிகாரத்தை செலுத்த முடியாது என்று நம்புறேன்ல இந்த அதிகாரம் தான் ஜாதி. எனவே, அதனால் தான் விடமாட்டறோம்” என கூறியுள்ளார்.

DIRECTOR Mari Selvaraj

DIRECTOR Mari Selvaraj [Image Source : File Image ]

இந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த பலரும் என்ன மாரி செல்வராஜ் இப்படியெல்லாம் பேசுகிறார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், ஏற்கனவே, மாரிசெல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த தங்கராஜ் படப்பிடிபில் மாரி செல்வராஜ் தன்னை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

DIR Mari Selvaraj

DIR Mari Selvaraj [Image Source : File Image ]

அவர் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது அவருடைய பேச்சுகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது படத்திற்கு எதுவும் பாதிப்பை ஏற்படுத்துமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுமட்டும்மின்றி மாமன்னன் படத்தை தடைசெய்யவேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Maamannan movie

Maamannan movie [Image Source : Twitter / @Thyview]

ஏனென்றால், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ஏஞ்சல் திரைப்படம் 80% சதவீதம் முடிந்துள்ளது, மீதமுள்ள 20% சதவீத பணியும் முடித்துக்கொடுக்குமாறும் படத்தின் தயாரிப்பாளர் மனு கொடுத்திருந்தார். இதனையடுத்து, இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்த வழக்கில், வரும் ஜூன் 28க்குள் உதயநிதி, மற்றும் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனமும் பதில் விளக்கம் தருமாறு உத்தரவிட்டுள்ளார். இதனால் படம் திட்டமிட்ட படி, வெளியாகுமா..? என்கிற கேள்வி எழும்பியுள்ளது.

Continue Reading
To Top