Gossips
பிரபாஸின் ‘சலார்’ பட ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.? படக்குழு விளக்கம்…
கேஜிஎஃப் பட வெற்றியைத் அடுத்ததாக தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல்சலார் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பரில் வெளியிட படகுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாலார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், அதில் உண்மையில்லை, படம் தள்ளிப்போகவில்லை என படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளதாம்.
அதாவது, செப்டம்பர் 28-ம் தேதி திட்டமிட்டபடி சாலார் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் உறுதி செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சலார் படத்துக்கு முன்னர், இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆதிபுருஷின் பிரமாண்ட வெளியீட்டிற்காக பிரபாஸ் காத்திருக்கிறார்.
இந்நிலையில், சலார் வெளியீட்டு தேதி பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஒரு பக்கம் பிரபாஸின் பேக் டு பேக் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு இது விருந்தாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த தெலுங்கு திரைப்படம் இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் செப்டம்பர் 28 வெளியாக காத்திருக்கிறது.
படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹாசன். பிருத்விராஜ் சுகுமாரனும் இப்படத்தில் வரதராஜா மன்னார் வேடத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஜெகபதி பாபு, மது குருசாமி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஹோம்பேல் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள ‘சலார்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், இப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
