Movies
அந்த மாதிரி கட்சிகள் இடம்பெற்றுள்ள பிரபுதேவாவின் ‘பகீரா’ டிரெய்லர்.!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட படம் பகீரா. இந்த காமெடி கலந்த சைக்கோ த்ரில்லர் திரைப்படத்தில் பிரபுதேவா மற்றும் அமைரா தஸ்தூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பணிகள் நீண்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டன. ஆனால் சில காரணங்களால் படம் வெளியிட தாமதமானது. இப்போது, இப்படம் மார்ச் 3 ஆம் தேதி வெள்ளித்திரையில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பகீராவின் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிடப்பட்டது. அதாவது, ஆதிக் ரவிச்சந்திரனின் தற்போதைய படமான ‘மார்க் ஆண்டனி’ படக்குழுவான விஷால், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இந்த பகீரா டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.
ட்ரெய்லரை வைத்து பார்க்கும்பொழுது, படத்தில் பிரபுதேவா இதுவரை இல்லாத ஒரு விசித்திரமான சைக்கோ-கில்லர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், படம் முழுவதும் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார் போல் தெரிகிறது. மேலும், இதில் டபுள் மீனிங் காட்சிகளும் நிறைந்துள்ளது.
இதையும் படிங்களேன் – கோப்பையை கைப்பற்றிய ரஜினி பேரன்கள்…இந்த முறை தனுஷை காணும்?
இந்த படத்தில் பிரபுதேவா, அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
