Connect with us

News

மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்..! புது படத்தின் புத்தம் புது அப்டேட்.!

லவ் டுடே  திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அடுத்தாக எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது. ஒரு பக்கம் அவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

Pradeep Ranganathan

Pradeep Ranganathan [Image Source: Google]

ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில், தற்போது பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்கவுள்ள படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக மீண்டும் ஜெயம் ரவியை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளாராம்.

pradeep ranganathan jayam ravi

pradeep ranganathan jayam ravi [Image Source : Twitter]

கோமாளி, லவ் டுடே போல இந்த திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படமாக இருக்கும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோமாளி படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி + பிரதீப் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Agilan box office 3

Agilan box office 3 [Image Source : Twitter]

மேலும் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான அகிலன் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top