News
#PS2: இன்று மாலை உங்கள் மனதை வருட வரும் ‘அக நக’ பாடல்.!
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ள நிலையில், படத்தின் முதல் சிங்களான “அக நக” பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என்று படக்குழு தற்போது அறிவித்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். நேற்று இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது, இன்று மாலை 6 மணிக்கு லிரிக் வீடியோ வருவதாக அறிவிப்பு வ்ரளியாகியுள்ளது.
இதையும் படிங்களேன் – கருப்பு குதிரையில் கம்பிரமாக சவாரி செய்யும் இயக்குனர் ஷங்கர்.!
Retweet this post and show how excited you are for the #AgaNaga lyric video dropping at 6 PM! #PS2 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @IMAX @primevideoIN @Karthi_Offl @trishtrashers pic.twitter.com/33vEndBxgb
— Lyca Productions (@LycaProductions) March 20, 2023
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர். சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் மற்றும் ஆர் பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் பேனர்களின் கீழ் தயாரிக்கப்பட்ட, பொன்னியின் செல்வன் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
Related
