இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் பெற்றது என்றே கூறலாம். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது.

pushpa 2 [Image Source : Twitter]
முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் படக்குழு ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்கள். இதன் படத்தின் படப்பிடிப்பு தெலுங்கு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Pushpa VS Fahadh Faasil [Image Source: Twitter]
இதற்கிடையில், அல்லு அர்ஜுன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பிறந்தநாளான ஏப்ரல் 8ஆம் தேதி மூன்று நிமிட கான்செப்ட் கொண்ட டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
இதையும் படிங்களேன் – மார்ச் 31ம் தேதி திரைக்கு வருகிறது ‘விடுதலை’ திரைப்படம்.!

Pushpa The Rise 2 [Image Source: Twitter]
இது குறித்த சமீபத்திய தகவல்களின்படி, டீஸர் கட் செய்யும் பணிகள் முடிந்துவிட்டது என்றும் தயாரிப்பாளர்கள் தற்போது இசை மற்றும் பின்னணி இசையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Related