News
நண்பர் சசிகுமாருக்கு அருமையான வெற்றிப் படம்.! ‘அயோத்தி’ படத்துக்கு ரஜினி பாராட்டு.!
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘அயோத்தி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறைவான எதிர்பார்ப்புகளுடன் வெளியான ‘அயோத்தி’ ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த தரமான படம் 25 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.
மேலும், இப்படம் ஏப்ரல் 7 முதல் பிரபலமான OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது. அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கிய ‘அயோத்தி’ படத்தில் சசிகுமார் ஆம்புலன்ஸ் டிரைவராக முக்கிய வேடத்தில் நடிக்க, நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா மற்றும் புகஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அயோத்தி படத்தை பார்த்துவிட்டு பாராட்டு மழையை பொழிந்துள்ளார். அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு, அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். தனது முதல் படத்திலேயே தான் ஒரு தலைசிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அயோத்தி…
நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.
தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!#Ayothi
— Rajinikanth (@rajinikanth) April 11, 2023
