Interviews
ரஜினிகாந்தை இயக்கும் கப்ஜா நடிகர்? இது என்ன புதுசா இருக்கு…
கன்னட சினிமாவில் ரியல் ஸ்டார் என்று அழைக்கப்படும் உபேந்திரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு, எனக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைத்தால், அவரை வைத்து ஒரு கன்னடப் படம் செய்வேன் என்று கூறியுள்ளார்.
கன்னட நடிகர் உபேந்திரா, ஷ்ரியா சரண் மற்றும் கிச்சா சுதீப் நடித்துள்ள ‘கப்சா’ திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் மார்ச் 17 அன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் சிறப்பு கதாபத்திரத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவா ராஜ் குமார் நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தை ஸ்ரீ சித்தேஷ்வரா எண்டர்பிரைஸ் மற்றும் அலங்கார் பாண்டியன் இணைந்து ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஆர் சந்துரு இயக்கியுள்ளார். சமீபத்தில், கப்ஜா படத்தின் புரமோஷனுக்கான பிரத்யேக பேட்டியின் போது, நடிகர் உபேந்திரா பேசுகையில், சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான் என்று புகழாரம் சூட்டினார்.
இதையும் படியுங்களேன் – பட வாய்ப்பு இல்லை…சொந்த கிராமத்துக்கு கிளம்பிய நடிகை ஸ்ரீ திவ்யா.!
மேலும், அவர் பேசுகையில், சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் ரஜினியுடன் பணியாற்ற விரும்புகிறார்கள், இது ஒரு கனவு என்றும் எதிர்காலத்தில் தனக்கு ஒருவாய்ப்பு கிடைத்தால், ஒரு கன்னட படத்தை இயக்க விரும்புவதாக தெரிவித்தார்.
