News
சேகர் பாபுவுக்கு ‘பாட்ஷா’ மாதிரி இன்னொரு முகம்.! ரஜினிகாந்த் புகழாரம்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை இன்று பார்வையிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது புதிய படமான ‘ஜெயிலர்’ படத்தின் 90 சதவீதத்திற்கும் மேலான படப்பிடிப்பை முடித்துள்ளார்.
இதற்கிடையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை இன்று பார்வையிட்டார் நடிகர் ரஜினிகாந்த். அதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி துவங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால பயணத்தை விளக்கும் கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சி நாளை மார்ச் 12ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், இன்று கண்காட்சியை நேரில் பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டார். சில புகைப்படங்களுக்கு நடுவில் புகைப்படம் கூட எடுத்தார். மேலும், ரஜினியுடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் கண்காட்சியை பார்வையிட்டு, முதல்வரின் நற்செயல்களை பாராட்டினார்.
இதையும் படிங்களேன் – வெறித்தனமாக கிக்-பாக்ஸிங் செய்யும் ஸ்ருதி ஹாசன்.! வைரல் வீடியோ…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான், அவர் படிப்படியாக முன்னேறி உள்ளார். அவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் முதலமைச்சர் பதவி, அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என கூறினார் .
தொடர்ந்து பேசுகையில், “சேகர் பாபுவுக்கு இன்னொரு முகமும் இருக்கு. பாட்ஷா மாதிரி” என கலகலப்பாக பேசினார் ரஜினி. ரஜினியின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவர், முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்த்து முடித்த பின்பு, “Super collection.. What a Memory” என்று தன் கைப்பட ரிவியூ எழுதினார்.
