News
விஏ துரைக்கு உதவுவதாக ரஜினிகாந்த் வாக்குறுதி.!
‘பாபா’ திரைப்படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்த வி.ஏ.துரை மருத்துவ செலவுக்கு ரஜினிகாந்த் முன் வந்துள்ளார்.
பிரபல ஏ.எம்.ரத்னத்திடம் அசோசியேட்டாக பணியாற்றிய வி.ஏ.துரை, பின்னர் எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தயாரிப்பாளர் வி.ஏ.துரை, தமிழ் நடிகர்களின் பல படங்களை தயாரித்து, என்னமா கண்ணு, லூட்டு, பிதாமகன், கஜேந்திரா, நாய்க்குட்டிபோன்ற ஹிட் படங்களை வழங்கினார்.
ஆனால், இப்பொது அவர் உடல் நலம் சரியில்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், இப்பொது மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் உதவி கேட்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து, இந்த வீடியோவை பார்த்த நடிகர் சூர்யா வி.ஏ.துரையின் ஆரம்ப சிகிச்சைக்காக ரூ.2 லட்சத்தை கொடுத்து உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவில், சூப்பர் ஸ்டார் தனது நண்பர் என்றும் அவரை நீண்ட வருடங்களாக தெரியும் என்றும் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், இன்று விஏ துரைக்கு ஆதரவளிப்பதாக ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். விஏ துரையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலக்குறைவு மற்றும் நிதி நெருக்கடி குறித்து அறிந்ததும், அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்களேன் – வைரமுத்துவின் மகளிர் தின வாழ்த்துக்கு பாடகி சின்மயி காட்டமான பதில்.! வைரல் ட்வீட்
மேலும், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர்’ படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவரை சந்திப்பதாக ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். இதற்கிடையில், ரஜினிகாந்த் தனது குழு மூலம் தயாரிப்பாளருக்கு சில ஆரம்ப உதவிக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
