Tweets
ஆஸ்கரை வென்ற இரு படக்குழுவுக்கும் தலை வணங்குகிறேன்.! ரஜினிகாந்த் ட்வீட்…
ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டதையடுத்து இரு படக்குழுவுக்கும் ரஜினி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆகிய இரண்டு படமும் ஆஸ்கார் விருதுகளை வென்றதால் இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமையான நாள். இன்று நடைபெற்ற புகழ்பெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் RRR ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் The Elephant Whisperers ஆகிய இரண்டும் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்ககள் முதல் அரசியல் தலைவர்கள் வரை, இந்தியாவுக்கான இந்த பெரிய வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். தற்போது, ஆஸ்கார் விருதை வென்ற இரு அணிகளுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்களேன் – Oscars 2023: இந்தியாவுக்கு பெருமை சேர்த்த RRR – The Elephant Whisperers…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “மதிப்புமிக்க ஆஸ்கார் விருதைப் பெற்ற ஸ்ரீ.கீரவாணி, ஸ்ரீ.ராஜமௌலி மற்றும் ஸ்ரீ.கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பெருமை மிக்க இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
My hearty congratulations to Shri. Keeravani, Shri. Rajamouli and Shri. Kartiki Gonsalves for getting the prestigious Oscar Award. I salute to the proud Indians.
— Rajinikanth (@rajinikanth) March 13, 2023
