Uncategorized
என்னாது.! ஜெயிலரில் ரஜினியின் மனைவி ரம்யா கிருஷ்ணனா? அப்போ படையப்பா காம்போ?
ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாக இருக்கும் படங்களில் மிகப்பெரிய ஒன்றாக அமையவுள்ளது.மேலும், படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நெல்சன் திலீப்குமாரின் இயக்கும் இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், இது ரஜினிகாந்துக்கு சரியான பான்-இந்தியப் படமாக இருக்கும்.
இப்போது, படத்தின் சில முக்கிய கதாபாத்திரங்களின் என்னவென்பது குறித்தா தகவல் வெளியாககியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற சிறைக் கண்காணிப்பாளராக நடிக்கிறாராம். அதனால்தான், படத்தின் தலைப்பை கூட அவரது கதாபாத்திரத்தை வைத்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக கூறப்படுகிறது. இதுபோக, வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதன்படி, சுனில் மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதில், ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு ஒரு சிறந்த வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணன், இந்த படத்திலும் அதே எதிரியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்களேன் – சூர்யாவின் அடுத்த பட வியாபாரம் தொடக்கம்.! பெரும் விலைக்கு போன ‘வடிவாசல்’ ஆடியோ உரிமை…
ஆனால், அதற்கு மாறாக மனைவியாக நடிப்பதாக கூறப்படுவதால், அப்போ படையப்பா காம்போ கிடையாதா என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். இதற்கிடையில், இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், விநாயகன் ஆகியோர் நடிக்கும் கதாபாத்திரங்கள் இன்னும் வெளியாகவில்லை, படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் அவை வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
