News
பிரபல நடிகையை கடத்திய ராமராஜன்..? பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்.!!
வெள்ளி விழா நாயகனாக வளம் வந்த நடிகர் ராமராஜன் கடைசியாக சாமனியன் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஒரு காலகட்டத்தில் இருவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு இளைஞர்கள் ரசிகர் கூட்டமும், பெண்கள் ரசிகர் கூட்டமும் அந்த காலத்திலேயே அவருக்கு இருந்தது. நடிகராக வலம் வந்து கொண்டிருந்த ராமராஜனின் மார்க்கெட் சரிவதற்கு காரணம் என்னவென்று, பலரும் யோசிப்பது உண்டு.

Ramarajan [Image Source : File Image ]
அந்த வகையில், தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ராமராஜன் மார்க்கெட் போனதற்கு முக்கிய காரணம் பற்றி உண்மையை உடைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய பயில்வான் ரங்கநாதன் “நடிகர் ராமராஜன் மேலூரை சேர்ந்தவர் ராமநாராயணனிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

Ramarajan [Image Source : File Image ]
அதன் பிறகு, மருதாணி திரைப்படத்தை அவரையே இயக்கி இருந்தார். அந்த படத்துடன் சேர்த்து கிட்டத்தட்ட 3 படங்களை அவர் இயக்கி உள்ளார். இயக்கி முடித்த பிறகு, நடிகராக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பல படங்களில் நடித்தார். நடித்துக் கொண்டிருந்தபோதே நடிகை நளினியை காதலித்தார்.

Ramarajan [Image Source : File Image ]
இதையும் படியுங்களேன்- கொஞ்சமாக காட்டி ரசிகர்கள் மனதை பஞ்சாக பறக்கவிட்ட ஐஸ்வர்யா மேனன்.! வைரலாகும் புகைப்படங்கள்.!
நளினி திருமணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லை இதனால் ராமராஜன் கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்து கொண்டார். பிறகு நளினியை வரவேற்பு நிகழ்ச்சியில் எம்ஜிஆரே கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். பல புதுமுக, இயக்குனர்களின் படத்தில் ராமராஜன் நடித்துள்ளார். பிறகு, அதிமுக கட்சியில் இணைந்தவுடன் ராமராஜனின் மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது. அவருடைய மார்க்கெட் சரிந்ததுக்கு முக்கிய காரணமே அதிமுக கட்சியில் இருந்து அவர் விலகியதுதான் என பயில்வான் ரங்கநாதன் கூறி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
