டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்.! வயசானாலும் உங்க ஸ்டைலும்..அழகும் உங்கள விட்டு போகல…
“வெள்ளை மனசு” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தை தொடர்ந்து படிக்காதவன், ஜல்லிக்கட்டு, தம்பி தங்க கம்பி, பொட்டு அம்மன், ராஜாக்களை அம்மன் என பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

@meramyakrishnan
பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “படையப்பா” படத்தில் தனது நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் தனது அசுர நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படம் தான் ரம்யா கிருஷ்ணனுக்கு மீண்டும் தமிழில் கம்பேக் கொடுத்தது.

@meramyakrishnan
அதைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் வில்லி வேடத்தில் நடித்தார். பிறகு பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கபட்டிருந்தார் ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய படங்களில் ராஜாமாதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

@meramyakrishnan
பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வராத காரணத்தால் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில், பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படியுங்களேன்- சூர்யா மீது செம கடுப்பில் தமிழ் நடிகைகள்.! அப்படி என்ன செஞ்சிட்டார்.?

@meramyakrishnan
51-வயது ஆகியும், இன்னும் இப்போது டாப்பில உள்ள ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அழகில் இருக்கிறார். அதற்கு ஆதாரம் காட்டும் வகையில், ரம்யா கிருஷ்ணன் லேட்டஸ்டாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு இன்னும் போகல என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
