திரையில் ரம்யா கிருஷ்ணன் செய்த சம்வங்கள்.! பவர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ் பட்டியல் இதோ…
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு 52 வயதாகியும், தனது அழகு மற்றும் ஸ்டைலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபத்திரிங்களில் நடித்து, அந்த வெற்றிக்கான ஒரு நபராக சிறந்து விளங்குகிறார். தனது 52 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
அந்த காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரம்யா கிருஷ்ணன். ‘பாகுபலி’ படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால், பாகுபலி படத்துக்கு முன்பே ரம்யா கிருஷ்ணன் வில்லலியாக அவர் கலக்கிய படங்களையும் சக்தி வாய்ந்த கத்பாத்திரத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்களேன் – ரொம்ப வருத்தம்….இதுதானால் தான் என்னுடைய திருமணம் நின்றது….மனம் திறந்த விஷால்.!
படையப்பா
படையப்பா திரைப்படத்தில் ரஜினிக்கு எதிராக நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லத்தனமாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். நீலாம்பரி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து மிகவும் பிரபலமானார் என்றே சொல்லலாம். மேலும், இப்படத்தில் அவரது கதாபாத்திரம் படத்தின் வெற்றியின் ஒரு முக்கிய சிறப்பம்சமாக இருந்தது. விரைவில் ரஜினிகாந்துடன் ‘ஜெயிலர்’ படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார், அதே வில்லி கதாபாத்திரம் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்
குயின்:
சமீபத்தில், ரம்யா கிருஷ்ணன் வெப் சீரிஸில் நுழைந்து, மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தார். இதற்கு ‘குயின்’ என்று பெயரிடப்பட்ட இந்த தொடரை ரேஷ்மா கட்டாலா மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினர். இந்த வெப் சீரிஸ், MX பிளேயரில் வெளியிடப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா கதாபாத்திரத்தை மிகவும் பொருத்தமாகவும், தைரியமாகவும் நடித்ததால் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
தானா சேர்ந்த கூட்டம்:
சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்ட ரம்யா கிருஷ்ணன், ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் அறிமுகமானார். இப்படத்தில் சூர்யாவுடன் அரசியல் கதைக்களத்தில் நடித்திருந்தார். இப்படத்தில், ரம்யா கிருஷ்ணன் ஒரு போலி வருமான வரி அதிகாரி வேடத்தில் நடித்தது அனைவரையும் கவர்ந்தது.
சூப்பர் டீலக்ஸ்
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், சினிமாவில் நடிக்க வாய்ப்பை தேடி சென்று தோல்வியைச் சந்தித்ததால், ஆபாச நடிகையாக மாறும் பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மிஷ்கின், விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். ரம்யா கிருஷ்ணன் பல வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்தாலும், தான் நடிக்க கடினமாகவும் சவாலாகவும் இருந்த படங்களில் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஒன்று.
பஞ்சதந்திரம்:
பஞ்சதந்திரம் படத்தில், நடிகை ரம்யா கிருஷ்ணன் கால் கேர்ளாக (மேகி) என்ற கதாபாத்திரத்தில் தனது தைரியமான நடிப்பை வெளிப்படுத்தினார். படத்தில் ரம்யா கிருஷ்ணன் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் ஒரு எதிரியாக இருந்தாலும், படம் முழுவதும் அவரது காட்சிகள் அவரை ஒரு வில்லியாக வெளிப்படுத்தவில்லை.
