Connect with us
Actor Ramki

Videos

ராங்கு பண்ணிய ராம்கி.? தாலி கட்டாமல் நடிகையுடன் குடும்ப நடத்திய சம்பவம் அம்பலம்.!

சினிமாத்துறையில் ஆரம்ப 80’S 90’S காலகட்டத்தில் கலக்கி வந்த பல நடிகர்கள் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக நன்றாக உடல் அமைப்புடன் எந்த மாதிரி கதாபாத்திரம் கொடுத்தாலும் அசத்தலாக நடித்து கொடுக்க கூடிய பல நடிகர்கள் பட வாய்ப்புக்காக காத்துள்ளனர். அந்த வகையில், ஒரு காலகட்டத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து ஹிட் படங்களை கொடுத்த ராம்கியும் சரியான பட வாய்ப்புக்காக ஆவலுடன் காத்துள்ளார்.

Ramki

Ramki [Image Source : File Image ]

ராம்கி சமீபத்தில் வெங்கட் பிரபு நடிப்பில் வெளியான கஸ்டடி திரைப்படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருப்பினும் முன்னதாக ஆரம்ப காலத்தில் இவருக்கு வந்த சரியான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு இன்னும் வரவில்லை. இதற்கிடையில், முன்னணி நடிகராக வளம் வந்த ராம்கி மார்க்கெட் சரிந்ததற்கான காரணம் என்ன என்பதை பயில்வான் ரங்கநாதன் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Ramki

Ramki [Image Source : File Image ]

இது தொடர்பாக பேசிய  பயில்வான் ரங்கநாதன் ” ராம்கி சாத்தூரை சேர்ந்தவர் நெல்லை மாவட்டத்துக்காரர்  பலப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் நடித்த பாதி படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது. ராதிகாவின் தந்தை நிரோஷாவை ராம்கி காதலித்தார். இருவரும் ஒன்றாக கதாநாயகன் கதாநாயகியாக நடித்த போதே லிவிங் டு கெதர்  வாழ்க்கை வாழ்ந்தனர்.

Ramki

Ramki [Image Source : File Image ]

இதையும் படியுங்களேன்- அடக்கடவுளே.! நடிகை சாவித்திரி அனுபவித்த கொடுமைகள்? இவருடைய வாழ்வில் இவ்வளவு சோகமா…

தாலி கட்டாமல் பல ஆண்டுகள் நடிகையுடன் குடும்பம் நடத்தினார் ராம்கி. இது பலருக்கும் தெரிந்தவுடன்  ராம்கி சற்று மார்க்கெட்டை இழந்துவிட்டார். பிறகு நிரோஷாவை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொண்ட பிறகு இன்னும் மார்க்கெட்டை இழந்தார். பிறகு ஒரு சில படங்களில் வில்லனாக நடித்தார். இருப்பினும் இன்னும் இளமையாக இருக்கும் ராம்கிக்கு பட வாய்ப்புகள் இல்லாதது வருத்தம்” என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

 

Continue Reading
To Top