Connect with us
Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

aathi

News

இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் தான் நடக்கும் – ஆதி ஓபன் டாக்..!

இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் தான் நடக்கும் – ஆதி ஓபன் டாக்..!

2017 ஆம் ஆண்டு வெளியாகிய மரகதநாணயம் எனும் படத்தில் ஜோடிகளாக நடித்ததன் மூலம் நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இடையே அறிமுகம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் அவர்களுக்குள் தற்பொழுது காதலாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்ட நிலையில் இருவருமே இந்த காதல் விவகாரத்துக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அண்மையில் நடைபெற்ற ஆதி தந்தையின் பிறந்தநாள் வீட்டில் கூட நிக்கி கல்ராணி கலந்து கொண்டிருந்தார்கள்.

இதையும் படியுங்களேன் … மகள் பிறந்தநாளன்று மனைவிக்கு சஞ்சீவ் கொடுத்த சர்ப்ரைஸ்..!

இருவரும் அதிகமான நேரங்களை ஒன்றாகவும் செலவிட்டும் வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் பேசிய ஆதி, தனது கிளாப் திரைப்படம் வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்தது சவாலான கதைகளை நடிப்பதற்காக நிதானமாக படங்களை தேர்வு செய்து இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் எனது திருமணம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். ஆனால் காதல் திருமணம் தான் நடக்கும். இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top