இந்தியா சார்பில் இரண்டு.! ஆஸ்கார் விருதுக்கான இறுதிப்பட்டியலில் நாட்டு கூத்து & குஜராத்தி மொழி படம்.!
2023 ஆஸ்கார் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் இந்தியத் திரைப்படங்களான RRR படத்திலிருந்து நாட்டு கூத்து பாடலும், The Last Film Show என்கிற (செல்லோ ஷோ) திரைப்படமும் இடம்பிடித்துள்ளது.
95-வது ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் பட்டியலில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் இடம்பிடித்துள்ளது. அதேபோல், குஜராத் மொழி படமான லாஸ்ட் பிலிம் ஷோ (செல்லோ ஷோ) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படக்குழுவால் 14 பிரிவுகளுக்கு விண்ணப்பித்ததில், நாட்டு கூத்து என்ற பாடல் ஒரே ஒரு பிரிவில் மட்டுமே இடம்பிடித்துள்ளது. ஆனால், லாஸ்ட் ஃபிலிம் ஷோ சர்வதேச திரைப்படப் பிரிவில் இடம் பிடித்துள்ளது இது, ஆர்ஆர்ஆர் படத்தை விட செல்லோ ஷோ படம் ஒரு படி மேலே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜனவரி 12 முதல் 17 வரை, பரிந்துரைக்களுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்று, ஜனவரி 24-ம் தேதி நாமினேஷன் பட்டியல் அறிவிக்கப்பட்டும். அதன் பின்னர், மார்ச் 12-ம் தேதி பரிந்துரைக்கப்பட்ட படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
ஆஸ்கர் விருது போட்டியில் நாட்டு கூத்து பாடல்
‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு கூத்து’ பாடல் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றது. 83 பாடல்கள் இடம்பெற்ற பட்டியலில் இருந்து 15 பாடல்கள் இறுதிப் பட்டியலுக்குள் நுழைந்துள்ளன. இதில், ப்ளாக் பாந்தர் படத்தில் இடம்பெற்ற ‘லிஃப்ட் மீ அப்’, அவதார் 2 படத்தில் இடம்பெற்ற நத்திங் இஸ் லாஸ்ட் ஆகிய பாடல்களுடன் நாட்டு கூத்து பாடல் ‘ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கார் விருதுகளுக்கான பட்டியலில் நுழைந்துள்ளது.
ஆஸ்கர் விருது போட்டியில் The Last Film Show
95-வது ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் பட்டியலில் RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் இடம்பிடித்துள்ளது. இதேபோல், சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவுக்கான இறுதிப் பட்டியலில் 92 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட படங்களில், குஜராத்திப் படமான லாஸ்ட் பிலிம் ஷோ ‘செல்லோ ஷோ’ படம் இடம்பெற்றுள்ளது.
