News
சாகுந்தலம் படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ கொடுத்த சமந்தா…
நடிகை சமந்தா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘சாகுந்தலம்’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக தயாராக உள்ளது. முதலில் இப்படம் பிப்ரவரி 17 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட இப்படம் தற்போது, “ஏப்ரல் 14 அன்று வெளியாகிறது என்று படக்குழு சமீபத்தில் அறிவித்துள்ளனர்.
3-டியில் வெளியாகும் சாகுந்தலம் படத்தை குணசேகரின் மகள் நீலிமா குணா தயாரிக்க, தில் ராஜு விநியோகம் செய்கிறார். இப்படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு அனைவரும் சேர்ந்து இன்று படத்தை பார்த்துள்ளனர்.
View this post on Instagram
மேலும், படத்தை பார்த்துவிட்டு சமந்தா, இவ்வளவு அழகான படத்தை எடுத்த இயக்குனர் குணசேகருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார். மேலும், எங்கள் குடும்ப பார்வையாளர்கள் சக்திவாய்ந்த உணர்ச்சிகளால் அடித்துச் செல்லப்படும் வரை என்னால் காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்களேன் – பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகனே…! லோகேஷுக்கு அதிரா ட்வீட்…
இந்த படத்தில், சச்சின் கெடேகர், கபீர் பேடி, டாக்டர் எம் மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நாகல்லா, ஜிஷு சென்குப்தா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார், படத்தில் அவர் பரத இளவரசராக நடிக்கிறார்.
