பாலிவுட் வெப் சீரிஸிலிருந்து விலகிய சமந்தா? பரபரப்பை ஏற்படுத்திய அந்த பதிவு…
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, சிகிச்சைக்காக வெளிநாடு சென்று வீடு திரும்பியவுடன், அவர் நடிக்க வேண்டியதாக இருந்த படத்திற்கான வேலையைத் தொடங்குவார் என்று சொல்லப்பட்ட்டது.
ஆனால், கடந்த சில நாட்களாக டோலிவுட் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின்படி, சமந்தா தனது திரையுலக நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை சமந்தா தனது உடல்நலத்தில் கவனம் செலுத்தவும், முழுமையாக குணமடையும் வரை படங்களில் இருந்து நீண்ட இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளார் என்ற செய்தி தீயாக பரவி வருகிறது.
தற்போது, அமேசான் பிரைமின் சமீபத்திய ட்வீட் சமந்தா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதால், சமந்தா ஓய்வு பெரும் செய்தி அனைத்தும் உண்மை என்பது போல் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் ‘சிட்டாடல்’ என்ற ஸ்பை த்ரில்லர் வெப் சீரிஸில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இதையும் படிங்களேன் – புனித யாத்திரையில் தான் செய்த தவறுக்காக கண்ணீர் விட்டு அழுத நடிகை மும்தாஜ் .!
ஆனால், சமீபத்தில் அமேசான் பிரைம் நிறுவனம் அந்த வெப் சீரியஸிலிருந்து வருண் தவானின் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அவர் நடிப்பதை உறுதி செய்தனர். மேலும் 2023 ஜனவரில் படப்பிடிப்பு தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த பதிவில் சமந்தாவின் தோற்றத்தையும் சமந்தாவின் பெயரை கூட அதிகாரப்பூர்வமாக குறிப்பிடவில்லை. ஆனால், இந்த தொடரில் சமந்தாவுக்கு பதிலாக வேற யார் நடிக்கிறார் என்பது குறித்தும் படக்குழு அறிவிக்கவில்லை.
View this post on Instagram
