News
OTT-யில் வெளியானது சமந்தாவின் ‘சாகுந்தலம்’ திரைப்படம்.!
நடிகை சமந்தா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘சாகுந்தலம்’ திரைப்படம் ஏப்ரல் 14 அன்று இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.
இந்த படத்தில், சச்சின் கெடேகர், கபீர் பேடி, டாக்டர் எம் மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நாகல்லா, ஜிஷு சென்குப்தா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதத்திற்குப் பிறகு, சாகுந்தலம் டிஜிட்டல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சாகுந்தலம் திரைப்படம் மே 11 அதாவது இன்று முதல் அமேசான் பிரைம் வீடியோக்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
get ready to witness an epic and timeless tale of love that transcends all boundaries ✨#ShaakuntalamOnPrime, watch nowhttps://t.co/NUpRmoZXj5 pic.twitter.com/o4Dhqw2jrV
— prime video IN (@PrimeVideoIN) May 11, 2023
ஸ்ரீ வெங்கடேஷ்வரா புரொடக்ஷன்ஸ் கீழ் படத்தை தயாரித்த இப்படம் தில் ராஜு, தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் தனது 25 வருட கேரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக கருதப்படுகிறது. சாகுந்தலம் காதல் பற்றிய ஒரு விசித்திரக் கதை மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட காளிதாசனின் சமஸ்கிருத நாடகமான ‘அபிஜ்ஞான சாகுந்தலம்’ அடிப்படையிலானது.
