Connect with us

News

லியோ படப்பிடிப்பிற்கு அதிரா வருகை.! ஹீரோ VS வில்லன் சந்தித்த தருணம்…

விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணையும் படத்திற்கு ‘லியோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் படத்தில் பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இது அவரது முதல் தமிழ் அறிமுகத்தையும் குறிக்கும்.

sanjay dutt thalapathy 67

sanjay dutt thalapathy 67 [Image Source: Twitter]

தற்போது, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க நடிகர் சஞ்சய் தத் தற்போது காஷ்மீர் சென்றுள்ளார். சஞ்சய் தத் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வருகை  தந்தார். சஞ்சய் தத் நேற்று  காலை காஷ்மீருக்கு சென்றடைந்தார். மேலும் அவர் காஷ்மீரில் ‘லியோ’ படத்திற்காக இரண்டு வாரங்கள் அங்கு இருப்பார் என்று தெரிகிறது.

Sanjay Dutt arrives LEO SET [Image Source: Twitter]

தற்போது, சஞ்சய் தத் ‘லியோ’ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகை தந்தது முதல் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை சந்தித்து பேசியது என அனைத்தையும் வீடியோவாக எடிட் செய்து படக்குழு ஒரு தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

 

அந்த வீடியோவில் ஹைலைட் என்னவென்றால், படத்தில் ஹீரோவான விஜய் மற்றும் வில்லனான சஞ்சய் தத் ஆகியோர் சந்திப்பது தான். இப்பொது, இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்களேன் –  சேகர் பாபுவுக்கு ‘பாட்ஷா’ மாதிரி இன்னொரு முகம்.! ரஜினிகாந்த் புகழாரம்…

Sanjay Dutt arrives LEO SET [Image Source: Twitter]

இதற்கிடையில், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் ஏற்கனவே ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் தங்களது போர்ஷன்களை முடித்துவிட்டனர். மேலும் படம் எதிர்பார்த்ததை விட மிகவும் வலுவாக இருக்கும். மேலும், ‘லியோ’ படத்தின் காஷ்மீர் செட்யூலில் கிட்டத்தட்ட 500 கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனராம். தற்போதைய அட்டவணை மார்ச் இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sanjay Dutt arrives LEO SET [Image Source: Twitter]

Continue Reading
To Top